Breaking News

மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையினை அமைச்சர் நமச்சிவாயம் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.



புதுச்சேரி நியமன சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.21,70,000/- செலவில் மேற்கொள்ளப்படும் - லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் கழிவுநீர் வாய்கால் மற்றும் சாலைகளை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையும், குப்பம் கிராமத்தில் உள்ள விடுபட்ட குறுக்கு தெருக்களுக்கு கழிவுநீர் வாய்கால் மற்றும் சாலைகள் அமைத்தல் பணிக்கான பூமிபூஜை ரூ.7,80,000/- செலவிலும், கைக்கலப்பட்டு கிராமத்தில் உள்ள புதுநகருக்கு சாலை அமைத்தல் மற்றும் கருமாதி கொட்டகை கட்டுதல் பணிக்கான பூமிபூஜை ரூ 13,50,000/- செலவிலும், சுத்துக்கேணி கிராமத்தில் உள்ள மேட்டு தெருவில் சாலையை மேம்படுத்துதல் மற்றும் கழிவுநீர் வாய்கால் அமைத்தல் பணிக்கான பூமி பூஜை ரூ.24,50,000/- " மதிப்பீட்டிலும் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பணிகளுக்கான பூமி பூஜையினை தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் முருகன், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்
ஆனந்தன் மற்றும் ஊர்பிரமுகர்கள், பொதுமக்கள் உட்பட பாஜக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



No comments

Copying is disabled on this page!